கற்பனையோ, காவியமோ அல்லாத வரலாறுகளை தான் ஈழத்தமிழன் தன் வாழ்க்கையால் வரைகின்றான் ….. சிறைவாசம் செல்ல தந்தை கரம் பிடித்த சிறுமி

0
596 views

தாயின் இறுதிக்கடனுக்காக மகன் சுடுகாடு செல்ல தந்தையும் மகளும் சிறைசாலை செல்லும் போது அனைவரையும் மனதையும் நெகிழ வைத்துள்ளது

மனைவியின் இறுதி நிகழ்வில் மூன்று மணித்தியாலயங்கள் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி!


கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.
இவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலீஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வா கனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றமை அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது..

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என பிள்ளைகள்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர்.

சில கற்பனையான கதைகளைத்தான் சினிமாகூடச் சொல்லும் …

சில நடைபெறா சரித்திரங்களைத்தான் காவியங்களும் சொல்லும் …

ஆனால் கற்பனையோ, காவியமோ அல்லாத வரலாறுகளைத்தான் ஈழத்தமிழன் தன் வாழ்க்கையால் வரைகின்றான்..

பட்ட துன்பங்கள் போதாதென்றா மிகவும் கீழ்த்தரமான துன்பங்களையும் தொடர்ந்தும் தந்து செல்கின்றாய் இறைவா ..

2008 இல் கைதான தந்தை ஆயுட்கைதி ..

அதன் பின்னர் இந்த மழலைகளோடு எவ்விதமான கொடுமைகளையெல்லாம் கடந்திருப்பாள் இந்த தமிழ்மகள் ..

போர்க்காலம் ,முகாம் வாழ்வு , மீள்குடியேற்றம் , நியவாழ்வு , எதிர்காலம் என காலம் இவளை புரட்டி எடுத்திருக்கும் என்பது அனுபவித்தவ்வர்கட்கு வெளிச்சம் ..

கண்கெட்ட காலன் அவள் உயிரைப்பறித்தான் . ஆயுட்தந்தைக்கு விடுமுறை இழவுவீட்டுக்கு 3 மணிநேரம்…

மகன் தாயினை அழைத்து தகனம் செய்ய சுடுகாடு போக .தங்கையோ விடுமுறை முடித்த தந்தையோடு சிறைவாசம் செல்ல தந்தை கரம் பிடித்தாள், படியேறினாள் செய்வதறியாது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here