மாமனிதர் வ.வேலும்மயிலும்

0
666 views

மாமனிதர்   வ.வேலும்மயிலும்


வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தன்   வயித்திலிங்கம் வேலும்மயிலும்  அவர்கள்  இலங்கை நிர்வாக சேவையில் பதவி உயர்வு பெற்று, அன்றைய வடமராட்சி வடக்குக் கிழக்கின் உதவி அரசாங்கஅதிபர் பணிமனையின் உதவி அரச அதிபராகவும், திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகவும் இருந்து பின்னர்  -மாகாண பொது நிர்வாகம் வடக்கு கிழக்கு மாகாண சபை,  சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் தனது முதிர்ந்த வயதிலும் சலிக்காது, வடமாகாண ஆளுநரின்  ஆலோசகராகவும்  இருந்து ஆற்றிய பணிகளின் நினைவுகளுடன் எங்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் மாமனிதர் வேலும்மயிலும் அவர்களுக்கு  எங்கள் கண்ணீர்க் காணிக்கைகள்….

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடிமையாகி வெறும் அரச அதிகாரிகளாகவே செயற்படுபவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து மக்களுக்காக வாழ்ந்ததில்லை……..அவர்கள் பின்னர மக்களால் நினைவு கூரப்படுவதுமில்லை….. ஆனால் அன்றுமுதல் தனது வாழ்வின் இறுதி வரை மக்களுக்காகவே வாழ்ந்து…..மக்களின் தேவைகளைக் காலம் நேரம் பார்க்காது  சிரித்த முகத்துடன், சலிப்பேதுமின்றிப் பணியாற்றிய எங்கள் வேலும்மயிலும் அவர்கள், தனது  இவ்வுலக வாழ்வைத் துறந்து தனது அன்பு மனைவியைத் தொடர்ந்து பயணிக்கும் இந்த வேளையில் அன்னாருக்கு எங்கள் இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அவர் அன்று போல் என்றும் எமது மக்களால் நினைவு கூரப்பட்டுக்கொண்டே இருப்பார்……!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here