இராணுவத்தடையையும் மீறி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்.
காலை 11.45 மணிக்கு
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றச் சென்றபோது மாவீரர் துயிலும் இல்லத்தின் வாயிலை மறித்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸை குறுக்கே விட்ட் பாதையை மறைத்திருந்ததுடன் பெருமளவான சிவில் உடை தரித்த இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பஸ்சிற்கு பின்பாக வீதியோரமாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வடமாகாண போக்குவரத்.துத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அஞ்லி செலுத்தப்பட்ட இடங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாடல்கள்
அங்கு உரயாற்றிய சிவாஜிலகங்கம் தெரிவித்ததாவது.எமது ணாவீரர்கள் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகளை அதனை ஆக்கிரமிரத்து வைத்துள்ள இராணுவத்தினர் இவற்றை விட்டு வெளியேற வேண்டும் எதிர் காலங்களில்எவ்வித அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாக மாவீரர் நாளைக் கொண்டாட வழி சமைக்கவேண்டும்.நாங்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இவர்களை நினைவு கூருவதனை எவரும் தடக்க முடியாது.எவர்கள் எதிர்பார்த்த இலட்சியம் நிளைவேறும் வரை தமிழர்கள் என்று மே நினைவு கூருவார்கள் என்றார்