தமிழீழ மாவீரரர் நாளைககொண்டாடுவதற்கு வடமராட்சிப் பிரதேசம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.
மாவீரர் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எஙாகும் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்படவுள்ளது.மாலை 6 05 மணிக்கு சகல மாவீரர்க்ஷதுயிலுமில்லங்கள்க் ஷமாவீரர் நினைவாலயங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செயாயப்பட்டுள்ளன. வடமராட்சிப் பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் தீயுடன் சங்கமமான தீருவில் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கு ஏற்றவகையில் தீருவில் சதுக்கம் மஞ்சள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வீதிகள் தோறும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாவீரர் நிகழ்வுகள் தொடர்பான சுவரொட்டிகள் மைதானத்தைச் சுற்றியும் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மாவுரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போகாகுவரத்து வசதிகளும் வடமராட்சி மாவுரர் தின ஏற்பாட்டுக்குழுவால் ஒழுஙாகு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடலிலே காவியமான கடற்புலிகள் கடற்கரும்புலிகளிற்கு தொண்டைமனாறு கடலில் ஈகைச் சுடர் ஏற்றுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொண்டைமனாறு சந்தியில் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட மாவீரர் நினைவுத் தூபி அப்பகுதி இளைஞர்களால் துப்பரவு செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது அதிலும் ீகைச்சுடர் ஏற்றப்படவுள்ளது