தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் 63 ஆவது பிறந்ததினம் வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வே சிவயோகம் உட்பட பலரும் கலந்து கொத்டு கேக் வெட்டியதுடன் இனிப்புப்பண்டங்களையும் பரிமாறினார்
அதற்கு முன்னதாக தலைவரின் வீட்டில் ஒன்று கூடிய இளைஞர்கள் பற்றைகள் நிறைந்துககாணப்பட்ட வீட்டினையும் சுற்றுப்புறத்தையும் சிரமதானப் பணிமூலம் துப்பரவு செய்தனர்.
தொடர்ந்து கேக் வெட்டி பரிமாறினர்.
இத்துடன் பிறந்த தினத்தை முன்னிட்டு தலைவரின் வீட்டில் மரக்கன்றும் நாட்டப்பட்டது.