கமலை சீண்டுகிறாரா பிரகாஷ்ராஜ்? நடிகர்கள் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு!

0
921 views

கமல் அரசியலுக்கு வரபோதவாதாக அறிவித்திருக்கும் சூழலில் சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கடந்த சில நாட்களாகவே பல அரசியல் கருத்துக்களை முன்வைத்து நடிகர் பிரகாஷ்ராஜ் பேசி வருகிறார். இதனால பல சர்ச்சைகளில் கூட சிக்கி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். சமீபமாக பிரதமர் மோடியை விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பெங்களுருவில் பத்திரிகையாளர்களிடம் பிரகாஷ்ராஜ் பேசுகையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என கூறினார்.

ரஜினி. கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதில் மும்மரம் காட்டும் இந்நேரத்தில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here