யாழ். மாவட்டத்தில் உள்ள மூன்று நகரசபைகளான பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கு தலா 9 உறுப்பினர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அவர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வர்த்தமானி அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.