அமரர் தங்கவடிவேல் ஞாபகார்த்தமாக கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடத்தும் கரப்பந்தாட்டத் தொடர் குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.அதில் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தொண்டைமனாறு கலையரசி விளையாட்டுக்கழகமும் 8 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் கச்சாய் வொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.







