வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விறுயியாட்டத்தில் தீருவில் விளையாட்டுக் கழகமும் நேதாஜி விளையாட்டுக்கழகமும் மோதின.பரபரப்பாக இடம்பெற்ற இவ்லாட்டத்தின் முதல்பாதியில் தீருவிலகன் பிரகாஸ் முதல் கோலைப் பதிவு செய்ய மறுகணமே நேதாஜியின் தர்சன் கோல் ஒன்றைப்போட்டு சமனிலைப்படுத்த ஆட்டம் எவ்வித மாற்றமும் இன்றித் தொடர சமனிலையில் ஆட்டம் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
இடைவேளையின் பின் அபாரமாகச் செயற்பட்ட நேதாஜி அணி முகுந்தன் மற்றும் தர்சன் இருவரும் கோல்போட 3:1 என வெற்றி பெற்றச் சம்பியது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம்.