இலங்கைத் தமிழர்களின் முதல்கட்ட நிவாரண உதவி திருச்சியில் இருந்து கடலூர் சென்றடைந்தது
பாரிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு திருச்சி வாழ் இலங்கைத் தமிழர்களால் திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதல் பகுதி இரண்டு லொறிகள் மூலம் கடலூரை சென்றடைந்துள்ளன மேலும் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் தொடர்ந்தும் பொருட்கள் தர விரும்புவோர் கே கே நகரில் உள்ள அருள் ஸ்ரூடியோவில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்