வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரை நடாத்தி வருகிறது… அந்த வகையில் இன்றைய இறுதி ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது..ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களைப்பெற்றனர்..வெற்றியாளரைதீர்மானிப்பதற்கு வழங்கப்பட்ட தண்ட உதையில் நேதாஜி அணியானது 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது..இவ்வாட்டத்தில் இளங்கதிர்அணியானது தோல்வியுற்றதால் வருத்தப்படாத வாலிபர் சங்க இறுதியாட்டத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் தோல்வியைத்தழுவியுள்ளது..வெற்றி பெற்ற நேதாஜி அணிக்கு எமது வாழ்த்துக்கள்