வல்வை அணி சம்பியன் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்ந்தாட்ட போட்டி இன்றைய தினம் இளைஞர் சேவை அதிகாரி பங்கஜன் அவர்களது தலைமையில் வல்லியானந்தம் விளையாட்டு கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வல்லியானந்தம் வி.கழகத்தை எதிர்த்து ஐக்கியம் வி.கழகம் களமிறங்கியது.இதில் ஐக்கியம் வி.கழகம் 2:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது.இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து அண்ணா வி.கழகம் களிமிறங்கியது.இதில் வல்வை வி.கழகம் 2:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் ஐக்கியம் வி.கழகத்தை சந்தித்தது.விறு விறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் வல்வை அணி 2:0 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனை தட்டிச் சென்றது . இப் போட்டியில் வெற்றி பெற்ற வல்வை அணியை வாழ்த்துகிறோம்.