யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ் போதனா ரைவத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட முதலமைச்சர் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை முதலமைச்சருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.