பலம்பொருந்திய பாசையூர் சென் அன்ரனீஸ் அணியை  வீழ்த்தி சுப்பர் 8 ஆட்டத்திற்குள் நுழைந்தது வல்வை ஆதி சக்தி  விளையாட்டுக்கழகம்.

0
935 views

 

மனோகராவின் மைதானத்தில் நேற்று முன்தினம்  வியாழக்கிழமை இ டம்பெற்ற ஆட்டத்தில்    வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகமும் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகமும்  பலப்பரீட்சை நடத்தின..இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே சுப்பர் 8 தகுதி பெறும் என்ற நிலை இருந்ததால் இரு அணிக்கும் ஈப்போட்டியானது வாழ்வா சாவா போராட்டமாக அமைந்திருந்தத.
.

பலத்த எதிர்பார்புக்கு மத்தியி்ல் நடைபெற்ற ஆட்டத்தி முதல் பாதி யின்ஆதிக்கத்தை செலுத்திய சென்அன்ரனீஸ் அணியினர் 13ஆவது நிமிடத்தில்கிறோசாந் மூலம் முதல் கோலைப்பதிவு செய்தது.தொடர்ந்து மிகவும் கடுமையாக போராடிய ஆதிசக்தி அணியினர் இடைவேளை வரை எந்த வித கோல்களையும் போடவில்லை. இதனால் ஆட்டம்  1:.0 என்ற நிலையில் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்திய ஆதிசக்தி அணியினர் 31ஆவது நிமிடத்தில் ஒரு கோலினை போட்டனர்.இதனை அந்த அணி சார்பில் நிமலதாஸ்  பெற்றுக்கொடுத்தார்.மேலதிக மாற்றங்கள் இல்லாத நிலையில் .1:1 என ஆட்டம் தொடர்ந்து செல்ல ஆட்டம் விறுவிறுப்படைய தொடங்கியது.தொடர்ந்தும் ஆதிசக்தி அணியினர் ஆதிக்கம் செலுத்திய போதும் எந்தவித கோலினையும் போடமுடியவில்லை. இறுதியில் ஆட்டம் 1:1 என சமநிலையில் முடிடைய சமனிலை தவிர்ப்பு உதைமூலம் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்க பட்டது.இதில் ஆதிசக்தி அணியினர்  4.:3 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று சுப்பர்8ஆட்டத்திற்குள் நுழைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here