தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் இரா. ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரமும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சதுரங்கப்பயிற்சியாளரும் ஓய்வு நிலை பொலிஸ் உத்தியோகத்தர் த.இரத்தினசிங்கமும் கலந்து கொண்டனர்