பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ”கொத்மலே சொக்ஸ்” கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் அணியும், காலுறுதிக்கு யாழ்ப்பானம் புனித ஹென்றியரசர் கல்லூரியும் தெரிவாகியுள்ளன.
ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா ஏழு அணிகள் போட்டியிட்டன. அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் மோதின. நான்கு குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின.
அந்த வகையில் குழு ”D” யில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு நிலையில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அதேபோன்று, குழு ”A” யில் அங்கம் வகித்த கொழும்பு ஹமீத் அல்-ஹுசைனி கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
அதன்படி குழு ”A” யில் இருந்து தெரிவாகிய கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லுாரி அணியும், குழு ”D” யில் இருந்து தெரிவாகிய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் நேற்றைய காலிறுதியில் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகியது.
முற்பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொறு கோல்களை அடித்த நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணியினராலும் மேலும் கோல்களை அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் எதிரணி பின்கள வீரர்களின் முறியடிக்கப்பட்டது.
வெற்றியை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற பெனால்டி முறையில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஹமீத் அல் ஹுசைனி அணியை வெற்றி கொண்டு யாழ் புனித பத்திரிசியார் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
மற்றய காலிறுதியாட்டத்தில் நிகொம்பு மரிஸ்டலா கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை சென்ஹென்றீஸ் கல்லூரி அணி மோதவுள்ளது.
நாளை மாலை 3 மணியளவில் கொழும்பு சிற்றிலீக் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளன.
குழு D இடம்பெற்ற சென்ஹென்றீஸ் கல்லூரி அணி நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று குழுவில் முதலிடம்பிடித்திருந்தது. 6 போட்டிகளிலும் 30 கோல்களை அடித்துள்ளதுடன் 2 கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது
குழு D யில் இடம்பெற்றுள்ள மரிஸ்டலா கல்லூரி அணி 2 வது இடம் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
90 நிமிட ஆட்டங்களில் சிறப்பாக ஆடக்கூடிய சென்ஹென்றீஸ் கல்லூரி அணி கடந்த ஆண்டு முதல்தடவையாக கிண்ணத்தைவென்றிருந்தது. எனினும் இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைமட்ட தேசிய போட்டிகளில் காலிறுதியாட்டத்துடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்க ஒன்று.
இலங்கை தேசியமட்ட கால்ப்பந்தாட்டத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கல்லூரிகளில் ஒன்றான நிகொம்பு மரிஸ்டல்லா கல்லூரி இம்முறை நடைபெற்ற Division-1 உதைபந்தாட்ட கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இறுதியாக நடைபெற்ற 2 போட்டிகளில் சென்ஹென்றீஸ் கல்லூரி அணியே வெற்றிபெற்றுள்ளது.
மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தலைநகரின் புகழ்பூத்த கல்லூரிகளை திணறடித்து பலமான நிலையில் காணப்படும், எம் வடக்கின் இளம் இரத்தங்களை, காலுறுதி மற்றும் அரைறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இறுதியாட்டத்தினை எம் வடக்கின் நாயகர்களுடையதனாக்கி கிண்ணத்தை மீண்டும் ஓர் முறை வடக்கிற்கு உரியதனாக்க நாமும் வாழ்த்துவோமாக..