வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் உள்ளூர் அணிகளுக்கிடையில் நடத்திய கால்ப்பந்தாட்டப்போட்டித்தொடரின் இறுதியாட்டம் நேற்று முன்தின்ம் குறி்த்த மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகமும் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் 10 ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்டுதையைச. சரியாகப்பயன்படுத்தி முதல். கோலைப் பதிவு செய்தது ரேவடி விளையாட்டுக்கழகம் .அடுத்த 4 ஆவது கிடைத்த நேரில் உதையை சஞ்சீவன் கோலாக்க 2:0 என்று முன்னிலை பெற்றது ரேவடி விளையாட்டுக்கழகம் . கோல்கணக்கில் மாற்றம் ஏற்படாத நிலையில் ஆட்டம்இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது இரண்டாவது பாதியாட்டத்திலும் மாற்றமில்லாத நிலையில் 2:0 என்று வெற்றி பெற்று கட்டியப்பாவின் கிண்ணத்தை தமதாக்கியது ரேவடி விளையாட்டுக்கழகம்;