சிறப்பாக இடம்பெற்ற வர்ண இரவுகள் நிகழ்வு

0
631 views

வமராட்சி கல்வி வலயத்தால் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த விளையாட்டு வீர வீராங்கனைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

வடமராட்சி கல்வி வலயம் நடாத்திய 99 ஆவது வர்ண இரவுகள் வீர வீராங்னைகளைக் கௌரவிக்கும் நீகழ்வு நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் இந்த வருடம் இடம் பெற்ற் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டக் கபடிப் போட்டியில் 20 வயது ஆண்கள் பெண்கள்  பிரிவுகளில் சம்பியனாக தெரிவு  செய்யப்ட்ட நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் உட்பட 100 இற்குமேற்பட்டோர் கௌரவிக்கப்பட்டனர்

வமராட்சி வலயக்கல்விப் பணியாளர் சி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே மாணவர்களிற்கான கௌரவத்தை வழங்கினார்.

அவர் உரையில் தெரிவித்ததாவது,

இலங்கை கிரிக்கெட் அணியில் வடமாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டிலே முன்னொரு காலத்தில் மாணவர்கள் எவ்வாறு கல்வி பயின்றார்கள் என்பதை எனது பெற்றோர் எனக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். வீட்டில் வெளிச்சம் இல்லாத இரவுகளில் வீதி விளக்குகளின் வெளிச்சத்திலிருந்து கல்வி கற்றார்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு கல்வி கற்றவர்கள்தான் தென்பகுதியில் பெரிய பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு ஒரு கஸ்டமான காலத்தில் கல்வி முன்னேற்றமாக இருந்தது ஆனால் கடந்த சில காலங்களில் கல்வி பின்னோக்கி சென்றது. ஆனால் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி முன்னோக்கி வருகின்றது.

எதிர்வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் தற்போது ஆசிய வலைப்பந்தாட்டத்தை சுவீகரித்த தர்சினி போன்றவர்கள் வடமாகாணத்திலிருந்தே இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்தார்கள். அதேபோன்று இங்கே நான் கண்ணால் கண்டேன் பலர் தேசிய மட்டத்தில் பல பதக்கங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும். சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசியாவில் விளையாடி இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த செல்வி தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் கவலை அடைவதாக தெரிவித்தார்.

அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தெரிவித்து அவர்களை பிளவு படுத்த நினைக்கின்றார்கள். தமது தலைமைத்துவத்தை தக்க வைக்க நினைக்கின்றார்கள். அவர்களின் பிழையான தகவல்களை கருத்தில் கொள்ளாது சரியானவற்றை இனங்கண்டு செயற்படுமாறு உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் சி உதயகுமார்,  வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here