இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வடமராட்சிப் பிரிவிற்கான கொட்டகை திறப்பு நிகழ்வு நாளை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய நோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஆணையாளர் பொ. அருந்தவராசா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் இ.ஜெயசீலன்,வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் செல்வச் சந்நிதி ஆலயத் தலைவர் சிவசண்முக ஜயர்,வடமராட்சி வலய பிரதிக கல்விப்பணிப்பாளர் யோ.ரவீந்திரன் உட்படப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் கடந்த வருடம் இடம்பெற்ற சந்நிதி ஆலய வருடாந்த உற்சவத்தின் போது கடமையில் ஈடுபட்ட சாரணர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.








