பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படும் எவ்.ஏ.கிண்ண உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியில் சென்சேவியர் விளையாட்டுக் கழகம்,வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம்,சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் நக்கீரன் விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்களிற்கு முன்னேறியுள்ளன.
குறித்த போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்று வருகின்றன.
ஆதில் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகம் 5:2 என்று நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தையும் எல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் 4:3 என:று மயிலிட்டி கண்ணகி வளையாட்டுக் கழகத்தையும் மணற்காடு சென்அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் 6:0 என்று பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தையும் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழகம் 4:1 என்று சென்;பீற்றர்ஸ் விளையாட்டுக் கழகத்தையும் தொற்கடித்து அடுத்த சுற்றுக்களுக்கு முன்னேறியுள்ளன.
இதேவேளை நேற்று நடைபெறவிருந்த ஆட்டம் ஒன்றில் பங்குபற்றவிருந்த கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் வருகைதராததால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும் சென்தோமஸ் விளையாட்டுக் கழகம் வருகை தராததால் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்திற்கும் வெற்றி வழங்கப்பட்ட அடுத்த சுற்றுக்களுக்குத் தெரிவு செய்யப்பட்டன.