தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக 138 குடும்பங்கள் இடம்பெயர்ந்தது பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

0
516 views

கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக பருத்தித்தறைப் பிரதேச செயலர்பிரிவில் இன்று வரை 258 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 138 குடும்பங்கள் இடம்பெயர்ந்தது பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்தறைப் பிரதேச செயலர் பிரிவில் கெருடாவில் கிழக்கு, பொலிகண்டி, வியாபாரி மூலை, புலோலி மேற்கு, புலோலி தென்மேற்கு, வல்லிபுரம் மற்றும் தும்பளை கிழக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளைச்சேர்ந்த சுமார் 258 குடும்பங்களைக் சேர்ந்த 1005 பேர் வெள்ளத்hல் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இக்குடும்பங்களில் பொலிகண்டியில் இருந்து இடம்பெயர்ந்த 28 குடும்பங்களைச்சேர்ந்தோர் பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்திலும் தும்பளை கிழக்கில் ஈருந்து இடம்பெயர்ந்த 56 குடும்பங்களைச்சேர்ந்தோர் உதயசூரியன் சனசமூகநிலையத்திலும் வல்லிபரம் பகுதியில் இரந்து இடம்பெயரந்த 56 குடும்பங்களும் திருமால்புரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here