வடக்கில் நேற்று வரை கொட்டித் தீர்த்த கனமழையால் வடமராட்சி பருத்தித்துறைப் பிரதேச செயலர் பிரிவில் இதுவரை 457 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 657 பேர் நான்கு நலன்புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பொலிகண்டி,தும்பளை,கெருடாவில்தெற்கு,சின்னாவலை,வல்லிபுரம் புலோலிமேற்கு,புலோலி தென்மேற்கு,மற்றும்தும்பளை கிழக்கு உட்பட்ட பகுதிகள் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததால் சமைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இப்பிரிவுகளில் இதுவரை சுமார் 457 குடம்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 668 பேர் கடும்பாதிப்புக்களிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் வல்லிபுரம்,பொலிகண்டி தும்பளை கிழக்குமற்றும் சின்னாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 168 குடும்பங்களின் 657 பேர் இடம்பெயர்ந்து அப்பகுதிகளில் உள்ள பொது நோக்கு மண்டபங்களள் மற்றும்சனசமூக நிலையக்கட்டங்களில் தங்கவைக்கப்பட்டள்ளனர்.இப்பகுதியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களிற்கு பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தால் சமைத்த உணவு வகைகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலர் இ.த. ஜெயசீலன் தெரிவித்தார்