உடுப்பிட்டி அ. மி கல்லூரியில் உதவி போலிஷ் அத்தியட்சகர் ஏ. எம்ஜவ்பர் உரையாற்றிய போது….

0
516 views

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கண்காணித்து வளர்ப்பதன் மூலம் அவர்களை ஒழுக்கசீலர்களாக உருவாக்கமுடியும் . அதன் மூலம் நாட்டில் ஏற்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளை குறைக்கமுடியம் இவ்வாறு தெரிவித்தார் உதவி போலிஷ் அத்தியட்சகர் ஏ. எம்ஜவ்பர் வல்வெட்டித்துறை போலிஸ் நிலையப்பகுதியைச்சேர்ந்த சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல; நேற்று முன்தின்ம் உடுப்பிட்டி அ. மி கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது அதில். கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
இன்று எங்கு பார்த்தாலும் கொலை களவு பாலியல் துஷ்பிரயோகம் என பரந்து கிடக்கின்றன. இதற்கு காரணம் யார் பெற்றோர்களை. ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை சிறுவயது முதல் கண்டிப்புடன் வளர்த்தால் இவ்வாறான சம்வங்கள் இடம்பெறாது. கலாச்சாரம் பண்பாடுகளில் உயர்ந்து விளங்கிய யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையைப்பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது . அதிலும் உலக நாடுகளையள வியக்க வைத்த மெருமையுடெய வல்வெட்டித்துறையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கலாமா.
இப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத செயற்பாடுகள் தற்போது குறைவடைந்துள்ளது.அதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பொது மக்களாகிய நீங்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் . எமது கலாசார பாரம்பரியங்களை வெளிநாடுகளிலிருந்து வரும் உறவினர் களே பாதிப்படையச்செய்ககின்றார்கள். இளைஞர்கள் பலர் தவறான வழிகளை நாடுவதற்கு அவர்களும் காரணம் என்றால் யாராலும் மறுக்கமுடியாது.
இப்பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு செய்தால் பாதிக்கப்படப்போவது உங்கள் பிள்ளைகள் தான். ஆனால் நாங்கள். அவ்வாறு செய்வதில்லை. சீருடை அணிந்தாலும் ஒவ்வொரு பொலிஸாரிடமும் மனிதமானம் உறைந்துள்ளது. அதனால் தான் சில இடங்களில் விட்டுக்nகhடுப்புடன் செயற்படுகின்றார்கள்.
இன்றைய நிலையில் பெண்கள் வீதிகளில் நடமாடும் போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆலயங்களுக்குச்செல்லும் போதும் ஏனைய வைபவங்களுக்குச்செல்லும் போதும; ஆடம்பரமான நகைகளை அணிந்து செல்லாது விடுவது உங்கள் உடைமைகளையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை உன்னிப்பாக கவனியுங்கள். உங்கள்பிள்ளை காதலனுடன ; கதைக்க விடுவதென்றாலும கண்டிப்பாக இருங்கள். பல பெண்பிள்ளைகளை காதல் என்ற வலையில் விழுந்து அவனால் ஏமாற்றப்பட்டு பின்அவனால் உங்கள் பிள்ளை தொடர் பாக அசிங்கமான படங்கள் தவகல்களை இணையத்தளங்களில் வெளியிடுகின்றார்கள் இதனால் பாதிக்கப்படுவது பிள்ளைகளின் எதிர்காலமும் குடும்ப மானமும் தான் எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும் .
உங்களுடைய பிரதேசங்களில் ஏதாவது சம்பவங்கள் இடம்பெறும்போது உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் உடன் அந்த இடத்தில் பிரசன்னமhகியிருப்பேன்.ஒவ்வொரு பொது மகனும் சீருடை அணியாத பொலிஸ் என்று எண்ணி செயற்படும் போது எமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக். கட்டுப்படுத்த முடியும் என்றார்.
இக்கலந்துiரயாடலில் வல்வெட்டித்துறைபொலிஸ் நிலையப்பொறுப்பதpகாரி எஸ் மீடின் உட்பட மதகுருமார்கள் சமுகம் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here