இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக் கடற்படையினர் இன்று பருத்தித்துறைகக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
நான்கு மீன்பிடிப் படகில் வந்து பருத்தித்தறைக் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவேளை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறைக் கடற்படையினர் படகில் இருந்த 23மீனவர்களையும் கைது செய்ததோடு கைது செய்த மீனவர்களையும் மீன் பிடிப் படகுகளையும் கடற்படைமுகாமுற்கு கொண்டு சென்றனர்.அவர்களை யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள அதிகாரி ரமேஸ் கண்ணா ஊடாக பருத்தித்துறை மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.