சச்சின், வார்னே கூட்டணியில் மாஜி ஜாம்பவான் வீரர்களுக்காக பிரத்யேக டி20 தொடர்..!

0
446 views

முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து புதிய டி20 தொடர் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஆலோசகர்களாகவும் பயிற்சியாளராகவும் உள்ள முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்ற உள்ளனர்.

இந்த மாஜி ஜாம்பவான் வீரர்களுக்காக பிரத்யேக டி20 தொடருக்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து புதிய திட்டம் வகுத்துள்ளனர். இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சச்சின், வார்னே, கில்கிறிஸ்ட் ரிக்கி பொண்டிங், மெக்ராத், பிரெட் லீ, ஜேக் கல்லீஸ், நில் மெக்கன்சி, ஆட்ர்டூ பிளிண்டாப் உள்ளிட்ட 28 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஊதியமாக கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ஆட்டம் தொடங்கும். அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 15 டி20 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த எஸ்ஸல் குரூப், ஐசிசிக்கு போட்டியாக ஒரு கிரிக்கெட் அமைப்பை உருவாக்க முயலுவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், சச்சின்- வார்னே ஐபிஎல் தொடருக்கு போட்டியாக இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here