தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனா வீராங்கனைகள் மூவர்

0
535 views

இலங்கையின் தேசிய 14 வயதுப் பெண்கள் உதைபந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் இடம்பிடித்துள்ளனர். ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகிய மாணவிகளே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

இந்த அணி எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் (14 வயதுப் பெண்கள்) பங்குபற்றவுள்ளது.

இவ்வீராங்கனைகளை வாழ்த்துவதோடு, பாடசாலை மட்டத்தில் இவ்வீராங்கனைகளை பயிற்றுவித்து தேசிய அணியில் இடம்பிடிக்க வைத்த உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான திரு.ச.செந்தூரன், கல்லூரி விசுவாசத்துடன் மேலதிக பயிற்றுநாராக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் பழைய மாணவனுமான திரு.தி.புருசோத்தமன் ஆகியோரை பாராட்டுகின்றோம்.

மகாஜனாவின் 14 வயதுப் பெண்கள் அணி கடந்த வருடம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here