திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி
அன்னை மடியில் : 17 March , 1941
ஆண்டவன் அடியில்: 16 March , 2026
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் இங்கிலாந்து , Brampton கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி March 16 , 2026 அன்று Brampton நகரில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தீருவில் தங்கனம்மாவின் பேத்தியும்
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை, கோதண்டநாயகி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும் சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகநாதர் , கனகம்மா தம்பதியினரின் மருமகளுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற திரு கிருஷ்ணசாமி அவர்களின் நேசமிகு துணைவியும் , சாந்திமதி, இந்துமதி, நித்யா ஆகியோரின் அன்புத்தாயாரும், சரவணபவன் ( பவன்) , ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மதிப்புமிகு மாமியாரும் பிரகாஷ், ஆகாஷ், சந்தோஷ், சர்வேஷ், ஐவன் , ஆறன் ஆகியோரின் அம்மம்மாவுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற சத்தியசீலன், காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன் , மனோரஞ்சனி ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற நிர்மலா, பத்மா, பத்மினி மற்றும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குமாரசாமி ( ஞானப்பிரகாசம்), சோமசுந்தரம், மல்லிகாதேவி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற பல்லவநம்பியின் பெரியம்மாவும் நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா ஆகியோரின் பெரியமாமியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் :
திகதி : March 22 ( ஞாயிற்றுக்கிழமை)
இடம் : Lotus Funeral and Cremation Centre
Address: 121 City View Drive, Toronto, ON M9W 5A8
காலை 11 மணிமுதல் மாலை 1 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12.30 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று 1.30 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
நன்றி
தகவல்
குடும்பத்தினர்









