தூய நின் கருவறை கோயிலில்
துதிநின்று திதி நாள் நினைவுகளுடன்
மூன்றாம் ஆண்டு
—————————————-
உறவாக நாம் உயிராகக் கலந்து
ஈர்பத்தாண்டுகள் இணைவில்
பிரியாது புவியோடு விரிந்து
எமக்காக மும் மதலை உயிர்த்து
அவர்க்காக அயராது உழைத்து
சுகமாகும் நிதமாகும் உதயமாய்
எனைத் தாங்கிடும் துணையாய் என்
வாழ்விற்கு உதிரம் ஈந்து உயிராக்கிட்டநின் காதல்
எனக்கும் பிள்ளைகட்கும் வாய்த்ததெல்லாம் எமது பிறவிகளின் பாக்கியம்தான் அம்மா…!
துணையாளை, அம்மாவை பிரிந்து
துயரினில் துவளவிட்டு எங்கள்
துயில் கலைத்த மூன்றாம் ஆண்டில்
தூய நின் கருவறை கோயிலில்
துதிநின்று திதி நாள் நினைவுகளுடன்….!
சந்திரு / சுந்து ( சந்திரகுமார் )
( மயூரன் , அரவிந் , தர்சிகா ) குடும்பத்தினர்
31.07.2025








