மரண அறிவித்தல்-திரு மகாலிங்கம் ஜெயகாந்தன்(ஜெயம்)

0
469 views

வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதி, மதவடியை பிறப்பிடமாகவும் திக்கம், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயம் என்றழைக்கப்படும் மகாலிங்கம் ஜெயகாந்தன் 12-02-25 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற நாகமணி மகாலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம் தையல்நாயகி ஆகியோரின் அன்பு மகனும், ஶ்ரீதேவியின் அன்புக்கணவரும், ராகவன், மயூரி காலஞ்சென்ற ரஜீவன் ஆகியோரது பாசமிகு தகப்பனாரும் மேரி திரேசாவின் மாமனாரும், ஜெய்சி இவானாவின் பேரனாரும்.

அன்னபூரணி கப்பல் ஓட்டிய காலஞ்சென்ற சண்முகம் தண்டையல் இவரது துணைவியார் காலஞ்சென்ற அன்னபாக்கியம் இவர்களின் பாசமிகு பேரனும், மற்றும் காலஞ்சென்றவர்கள் வேலுச்சாமி, தனபாலசிங்கம், அழகேஸ்வரி, ஆகியோரின் பெறாமகனும் காலஞ்சென்றவர்கள் (மூர்த்தி மாஸ்டர்) சிவசுந்தரமூர்த்தி,செல்வநிதி, செந்திவேல், கற்பகக்கண்டு ,பார்வதிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்.

லெட்சுமிகாந்தன் காந்தரூபன்(லண்டன்) கௌசலாதேவி, நிர்மலாதேவி(இந்தியா) கலாதேவி(இந்தியா) சுசிலாதேவி, சந்திரகாந்தன், பத்மலோசினி, சந்திரா (இந்தியா) கலைவாணி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.

நிர்மலாதேவி(இந்தியா) சீத்தாலக்‌ஷ்மி(லண்டன்) தர்மகுலசிங்கம் காலஞ்சென்ற மாயழகு, ராமச்சந்திரன்(இந்தியா), ரவீந்திரதாஸ் யோகேஸ்வரி யோகராசா சண்முகதாஸ், சுதாகர்(லண்டன்) சுரேஸ்(லண்டன்), தியாகலிங்கம்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.

கலாமதி, யாமினி, சுந்தரமூர்த்தி, பாலமுருகன், கௌரி, ராஜன், மோகன், கீர்த்திகாதேவி, லக்‌ஷ்மி, பிரியா சத்யா, சுதர்சன், ஹிமாலினி, சுபேசன், சுகிர்தன், மைதிலி, தனுசியா, தனுஷியன், ஹரிஸ்ராஜ், பைரவி அபிராமி, கலைமதி, சரிசாந்த் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற வான்மதி, சந்திரமதி, பிரேமலதா, ராதிகா, விஷ்னுவர்மன், விஷ்னுபாரதி, விக்னேஷ், நவகோடி, நதியா ஆகியோரின் சித்தப்பாவுமாவார்.

அன்னாரது பூதவுடல் திக்கம் நாச்சிமார் கோவிலடி வசிப்பிட இல்லத்திலிருந்து 14ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஊரணி மயானத்திற்கு தகனக்கிரியைக்காக கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.