சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் உதயசூரியன் கழக கரப்பந்தாட்ட காட்சிப் போட்டியும்

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பரஞ்சோதியப்பா ஞாபகார்த்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா 15/09/2022 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

அதையொட்டி உதயசூரியன் கழக அணியின் (பெண்கள்) கரப்பந்தாட்ட காட்சிப் போட்டி மாலை 4.00 மணிக்கு உதயசூரியன் கழக உல்லாசக்கடற்கரையில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பரஞ்சோதியப்பா ஞாபகார்த்த சிறுவர் பூங்கா திருமதி சோதிநாராயணசாமி (பரஞ்சோதியப்பா) அவர்களினால் திறந்து வைக்கப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.







