எமது வல்வை விளையாட்டுக்கழகம் மாவட்டரீதியில் மற்றும் வடமராட்சிக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட தொடர்களின் மாபெரும் இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு வைபவமும் வரும் ஞாயிற்றுக்கிழமை (15-03-2015) பிற்பகல் 2.30 மணியளவில் எமது வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் யாழ்மண்ணின் புகழ் பூத்த 30ற்கும் மேற்பட்ட கழகங்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இறுதிப் போட்டிகளில் மோதவுள்ள அணிகள் விபரம்பின்வருமாறு;
மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட அணிக்கு 08 பந்துப்பரிமாற்றங்கள் 08 வீரர்களை கொண்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கொக்குவில் பிரம்படி Vs காந்தி நியூஸ்ரார்
வடமராட்சிக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 10 பந்துப்பரிமாற்றங்கள் 09 வீரர்களை கொண்ட சுற்றுப்போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் விக Vs மாலுசந்தி மைக்கல் விக
“அனைவரும் வருக ஆதரவு தருக”
அன்புடன் வல்வை வி க