வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்திய வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் முதலாம் இடத்தினை நேதாஜி விளையாட்டு கழகமும்
இரண்டாம் இடத்தினை உதயசூரியன் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது..
வலைப்பந்து போட்டியின் ஆட்டநாயகியாக நேதாஜி விளையாட்டு கழக .கு.லக்ஸியா தெரிவு செய்யப்பட்டார்.அவர்களுக்கு வல்வை விளையாட்டு கழகம் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் முதலாம் இடத்தை நேதாஜி விளையாட்டுக்கழகமும்
இரண்டாம் இடம் உதயசூரியன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது. கரப்பந்தாட்ட போட்டியின் சிறந்த ஆட்டநாயகியாக நேதாஜி அணியின் மலர்நிலா தெரிவு செய்யப்பட்டார். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கரப்பந்தாட்டத்துக்கு மைதானம் தந்து உதவிய புட்சல் விளையாட்டு மைதான நிர்வாகத்தினருக்கும் வலைப்பந்து விளையாட்டுக்கு மைதானம் (மின் ஒளியுடன்)தந்து உதவிய தீருவில் இளைஞர் விளையாட்டு கழகத்துக்கும் மற்றும் அனைத்து பரிசில் களையும் அன்பளிப்பு செய்த முத்துகுமாரு . தாமோதரன் பிள்ளை குடும்பத்தினருக்கும் வல்வை விளையாட்டு கழகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்….