உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, திங்கள்கிழமை இரவு தலைநகர் கீவில் உள்ள தனதுஅலுவலகத்தில் இருந்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டார், பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபின்னர் முதல் முறையாக அவர் அலுவலகம் திரும்பியிருக்கின்றார்.
நான் இங்கே, கியேவில், பாங்கோவாவில், ஒளிந்துகொள்ளவில்லை. இந்தப் போரை, நமது தேசியப் போரைவெல்லும்வரை வரை நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என்றுதிரு ஜெலென்ஸ்கி தனது அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டவீடியோவில் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி மேலும் கூறுகையில் தான் ஒளியவில்லைஎன்றும், ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்ட தனது நாடுஅனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவோம் என்றும் கூறினார்.