“இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். அந்தவகையில் பிரிட்டனில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் பிரிட்டன் அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் டிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.