சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு சவாலாக 300 பில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை தொடங்கும் ஐரோப்பிய ஒன்றியம்.
சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு ‘குளோபல் கேட்வே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சீனாவில் வெளியுறவுக் கொள்கையில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. சீனா உலகெங்கிலும் சுமார் 88 நாடுகளில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நிதியளித்துள்ளது.
புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் தந்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோ பசிபிக், ஐரோப்பிய ஒன்றியம் வரை பரவிவிட்டது. சீனாவின் காஸ்கோ நிறுவனம், மிகப்பெரிய கிரேக்க கன்டெயினர் துறைமுகமான பிராஸின் (Piraeus) மூன்றில் இரு பங்கை தன் வசம் வைத்துள்ளது. அதே போல க்ரோஷியா நாட்டில் சீனா ரோட் அண்ட் பிரிட்ஜ் கார்ப்பரேஷன் ஒரு முக்கிய பாலத்தைக் கட்டியுள்ளது.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. இத்திட்டம் சீனாவின் முன்னெடுப்புகளுக்கு எதிராக ஒரு போட்டியாக இருப்பதை விட, வளரும் நாடுகளில் சில நல்ல விஷயங்களைச் செய்யத் தேவையான பணத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்து உதவியதாக இருக்கும்.
இருப்பினும் இதுவும் ஒரு விதமான ஆதிக்கம் தான். பூகோள அரசியல் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியமும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவே முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீன கட்டுமான திட்டம்