வல்வை விளையாட்டு வீரன் மயூரன் உள்ளடங்கிய பருத்தித்துறை பிரதேச செயலக அஞ்சல் ஓட்டக் குழு இளைஞர் மன்ற தேசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்…27.06.2016 அன்று உடுப்பிட்டி இமையானன் விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா 2016 நடை பெற்ற 4*400ஆ அஞ்சல் ஓட்ட போட்டியில் மாவட்ட மட்டதில் முதலாம் இடத்தை பெற்றதோடு கொழும்பில் செப்டெம்பர் நடைபெற உள்ள இளைஞர் மன்ற தேசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
நீண்ட இடைவெளியின் பின்பு மீண்டும் வல்வை வீரர் ஒருவர் தேசிய மட்ட போட்டி ஒன்றுக்கு தெரிவாகி உள்ளார் என்பது குறிப்பிட தக்கது…