பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளன.

0
458 views

பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகங்கள் சர்வதேச ரீதியில் இன்றிரவு திடீரென முடங்கியுள்ளன.

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இவ்வாறு முடங்கியுள்ளன.

இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் பயனாளர்கள் ருவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பேஸ்புக் வலைத்தளத்துக்குப் பிரவேசிப்பவர்களுக்கு, பேஸ்புக் கணக்குக்குள் நுழையும்போது, “மன்னிக்கவும், நாங்கள் முடிந்தவரை தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்கின்றோம்” என்ற செய்தி காட்டப்படுகின்றது.

வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இயங்கினாலும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவோ ஏனைய வசதிகளைப் பயன்படுத்தவோ முடியாமல் இருக்கின்றன.

இந்தச் சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தகவல் தொடர்பு நிர்வாக இயக்குநர் ஆண்டி ஸ்டோன் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கூடிய விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here