வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவுக்காக இன்று 5 உறுப்பினர்கள் மாத்திரமே சமூகமளித்த நிலையில் போதிய கோரம் இல்லாத்தால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








