புதிதாக அடையாளங் காணப்பட்ட வைரஸ்

0
634 views

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான “லாம்ப்டா” வைரஸ் சுமார் 30 நாடுகளில் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க இலங்கை எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் தற்போதைய கொரோனா தடுப்பூசிகளுக்கு கூட கட்டுப்படாது என்றும் குறிப்பிடப்படுகின்றது. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக தொலை தூரத்தை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

கொரோனா வைரஸின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரம் தளர்த்தப்பட்டன. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here