திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

0
636 views

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வினோதன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (30) மாலை இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில் மீன் வலை துப்பரவு செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக அவரை அவசர அம்புலன்ஸ் வண்டி ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திடீர் மரணத்திற்கான காரணம் இது வரை தெரியவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here