யாழ் நகரின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் குவிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
எப்போதும் இல்லாதவாறு நேற்றைய தினம் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதை அடுத்து யாழ் நகரின் மத்தியிலுள்ள முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டன. இருந்தபோதும் சில வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வர்த்தக நிலையங்களை மூடியதுடன் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றர்.
அத்தோடு பழைய பஸ் தரிப்பிடத்திலுள்ள பஸ்கள் அனைத்தையும் புதிய பஸ் நிலையத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.








