பூப்யுனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 25இற்கு மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் உடுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கொற்றாவத்தையைச் சேர்ந்த அரச அலுவலர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் கலந்து கொண்ட பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட கோம்பு, ஆதியாமலை, நாவலடி மற்றும் இலகடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்து என கரவெட்டி சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தொற்றாளர் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகத்தில் கால்ப்பந்தட்டப் பயிற்சியில் ஈடுபட்டார் எனவும் அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட 9 மேற்பட்ட வீரர்களும் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








