தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தாலால் வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளும் முடங்கிக்காணப்பட்டன.
சிறைகளில் தடுப்புக்காவலில் தடுத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை அடுத்து வடமராட்சி பகுதியிலுள்ள சகல சந்தைகள் உட்பட அனைத்து வர்த்தகநிலையங்களும் மூடப்பட்டுள்ளன.போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.பாடசாலைகள் இயங்கிய போதும் மாணவர்கள் வருகை தரவில்லை.அரச தனியார் திணைக்களங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன