கோவிட்-19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

0
529 views

உடுப்பிட்டி அ.மி கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளில் இன்று கோவிட்-19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

 

வடமராட்சிப் பகுதியிலுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்றையதினம் உடுப்பிட்டி அ.மி கல்லூரி மண்டபத்தில் பிரதி அதிபர் திரு த. விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திரு.க.செந்தூரன் உடுப்பிட்டி பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. தவசிரோஜன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here