சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில பருத்தித்துறையில் திரையரங்கு பிரபல மூடப்பட்டுள்ளது

0
603 views

பருத்தித்துறை பகுதியில் அறிவுறுத்தல்களையும்,  சுகாதார விதிமுறைகளையும் மீறி இயங்கிய திரையரங்கிற்கு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவால் இன்று சீல் வைக்கப்பட்டது. சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு ஒன்றே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறைப்பகுதியில் அண்மையில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த இருபத்தைந்துக்கு மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான பிசிஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திங்கள் கிழமை வரை திரையரங்கை பருத்தித்துறையில் திறக்கவேண்டாமென மாகாண சுகாதார பணிப்பாளரின் ஆலோசனை பெற்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியாலும் பொதுசுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி நேற்று சனிக்கிழமை இரவு 9.30 காட்சி நடத்தப்பட்டுள்ளதோடு அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவான மக்களை ஒன்றுகூட இடமளித்ததாலேயே திரையரங்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திரையரங்கில் மக்கள் கூடியுள்ளமை குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுமிருந்தன. இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை பொலிஸாரின் முன்னிலையில் திரையரங்கிற்கு சீல் வைத்ததோடு இது தொடர்பான கடிதங்களையும் சம்மந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மாகாணப் பணிப்பாளருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் மக்கள் கூடும் விதமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் கொரோனா பரவலை தீவிரப்படுத்தும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here