சிதம்பரக்கல்லூரி முன்னாள் அதிபர் செல்வநாயகம் நினைவு முகப்பு நிர்மாணிக்கப்படவுள்ளது

0
1,469 views

சிதம்பரக்கல்லூரி முன்னாள் அதிபர் செல்வநாயகம் நினைவு முகப்பு

சிதம்பரக்கல்லூரி முகப்பு நிர்மாணிப்புடன் நிறுவ உள்ள சரஸ்வதி சிலை அமைக்கும் வேலைகள் கடந்த விளக்கீடு அன்று ஆரம்பமாகி உள்ளது. சிதம்பரக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் அனைவருடைய பேராதரவுடன் அதிபர் செல்வநாயகம் நினைவு முகப்பு அமைக்கப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

சிதம்பரா ஆசிரியராக ஆரம்பித்து, அதிபராகி பின்பு பல பாடசாலை கொத்தணி அதிபராக எங்கள் கல்லூரியில் நீண்ட நாள் சேவையாற்றிய ஆசானுக்கு அவரது நினைவு நாளில் நினைவு முகப்பு மங்களகரமாக திறந்து வைக்க எண்ணியுள்ளோம்.

குழுச் சாரண ஆசிரியர், வானொலி தயாரிப்பில் நிபுணர், கணனி தொழில் நுட்பத்தை எங்களுக்கு அறிமுகமாக்கி இன்றைய தொழில் நுட்ப யுகத்திற்கு தயார்படுத்தியவர், உயிரியல் போதித்த அதிபர், தொண்டைமானாறு வெளிக்கள ஆராய்ச்சி நிலையத்தை நடாத்தியவர். கடமை, கண்ணியம், கட்டுபாடு – இறுக்கமாக பின்பற்றி எல்லோருக்கும் முன்னுதாரணமான வல்வெட்டித்துறை அதிபர் அவர்களுக்கு கல்லூரியில் இந்த நினைவு முகப்பு அமைவது சிறப்பாகும்.

உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்களே நலன் விரும்பிகளே உங்களின் ஒரு சிறிய பங்களிப்பு ஊடாக இந்த நினைவு முகப்பை அமைக்க ஒற்றுமையாக முன் வாருங்கள்

நன்றிகள்.
மாணிக்கத்தியாகராசா  ரமேஷ் 00447947213080

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here