கிளினிக் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணியை செய்வதற்கு முன்வந்துள்ளது தபால் திணைக்களம்

0
548 views

மந்திகை ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை வைத்தியசாலை நிர்வாகத்திடம் பொறுப்பெடுத்து நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணியை செய்வதற்கு தபால் திணைக்களம் முன்வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அஞ்சல் அலுவலர்களுடனான கலந்துரையாடல் ஒன்று பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தில் இன்று பருத்தித்துறை அஞ்சல் அதிபர் அ.அருளாந்தசோதி தலைமையில் இடம்பெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் மற்றும் வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு இந் நடை முறைகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் இச்செயன்முறையின் போது எவ்விதமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றப்படவேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here