அரிசி விலையில் மாற்றமில்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தண

0
415 views

சந்தையில் அரிசி விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

அரிசி தொடர்பாக வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்புகளை அழைத்து அமைச்சர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என அமைச்சர் தெரித்துள்ளார்.

நெல்களை பதுக்கி வைத்திருக்கும் அரிசி வர்த்தகர்கள் மற்றும் விலைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை சந்தைக்கு வெளியிடாதவர்கள் பற்றிய தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ளன என்றும் அவர் கூறினார்.

எனவே அரிசியை மொத்தமாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்காதிருந்தால், எந்தவொரு விலையும் அதிகரிக்காமல் நுகர்வோரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய அமைச்சரவையின் ஒப்புதலுடன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here