இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

0
553 views

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here