கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. கொழும்பு, கம்பஹா,புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று (24) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகிறது.
இந்த ஊரடங்கு மீளவும் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். நாளை (25), நாளை மறுநாள் (26) இலங்கை முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும்.








